Skip to main content

மாற்றம்

 

அன்று,

சிக்கனமாக வாங்கிய சைக்கிள் 

என்னை மட்டும் சுமக்கக்

கால் நெடுக உடன் வரும்

புன்னகை முகத்தார் - அப்பா !  

 

அண்டை வீட்டிலிருந்தாலும்

அயல்நாட்டிற்கே சென்றது போல்

பதைத்து வாடும் பேதை 

பாசத்தால் ஆன நங்கை - அம்மா!

 

இன்று,

பலரின் கண்ணீரில் பெற்ற

சிலகோடி சன்மானத்தில்

சொகுசு கார் வாங்குபவன் - என் 

சிறு குழந்தை சிந்திய

முறுவலைக் கூட அள்ள

முற்பட முனையாதவன்...!

 

முடிவில்,

பணியாள் அள்ளிக்கொண்டாள்

அவனை, அக்கறையில்லாமல் - என் 

துணைவியும் தள்ளி நின்றதனால்...!

 

கணங்கள் பல மாறியதால்

மனமும் மாறக் கூடுமோ?


                                                               - ஐஸ்வர்யா ரவீந்திரன்

Comments

Popular posts from this blog

தேவதைகள் - ஃப்ரம் ஸ்ரீரங்கம்

முன்னுரை:                    தலைப்பைப் பார்த்தவுடன்   ஒருவேளை   இது   ஆன்மீக ரீதியான புத்தகமாக இருக்குமோ என்று தோன்றியது. ஏனென்றால் ஸ்ரீரங்கம் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு பிரசித்த பெற்ற ஆன்மீகத் தளம். அதுமட்டுமின்றி இதே எழுத்தாளரான சுஜாதா அவர்கள் ஏற்கனவே ஆன்மீக புத்தகங்கள் மற்றும் புதினங்கள் எழுதியுள்ளார். ஆதலால் கூட எனக்கு அப்படித் தோன்றியிருக்கலாம். இப்புத்தகத்தில் உலாவி வரும்   ஸ்ரீரங்கத்து   தேவதைகள் , ஆசிரியரின் கல்லூரி நாட்களில் அவருடன் பயணித்தவர் ஆவர். ஒரு சாதாரண மனிதனை எப்பொழுது தேவதை என்று குறிப்பிடலாம் என்ற கேள்விக்குத் தக்க பதிலை இந்த புத்தகம் அளிக்கின்றது.       நன்றி மறப்பது நன்றன்று:                   பாப்ஜி - நான் படித்த முதல் கதை. இதில் பூவராகவன் என்ற கதாபாத்திரம் பாப்ஜி என்று அழைக்கப்படுகிறார். இவர் ஆசிரியரின் கல்லூரி நண்பரும் கூட. கல்லூரியில் படிக்கும்போது ஒரு சில குழப்பங்களால் தவறான அபிப...

NEW TRIAL WITH BRUSH PENS

                                                                                - AISHWARYA RAVINDRAN  

TO BE WITH MOON IS A BOON

                                                                     - AISHWARYA RAVINDRAN