கனவுகள் அனைத்தையும்
கவிதைகளாய் உருமாற்றி
பத்திக்குள் பதுக்கி வைத்து
மனதில் மறைத்து வைத்திருந்தேன்
விண்ணிலும் மண்ணிலும்
பயணிக்கும் காகிதக் கப்பலில்
அவற்றை ஏற்றுமதி செய்து
கவலையுடன் காத்திருந்தேன்
முகவரி மாறியதா அல்லது
வாகனம் வீழ்ந்ததா?
பதிலேதும் பெறாததால்
ஏமாற்றத்தில் ஏங்கியிருந்தேன்
முடிவில்,
பழையன "கிழித்தலும்"
புதியன புகுத்தலும் என்றதனால்
பெறுநர் 'அதை' பிரிக்கவுமில்லை
படிக்கவுமில்லை...
-ஐஸ்வர்யா ரவீந்திரன்
மிக அருமை,.எளிமை. வாழ்த்துகள்
ReplyDeleteமிக்க நன்றி
Delete