Skip to main content

மனதின் சுவடுகள்

 கனவு

என் தூக்கத்தில் சுவை கலந்த

உன்னை விடிந்ததும் 

மனமின்றி அனுப்பிவைக்கிறேன்.



காலம் 

எதுவும் நிரந்தரமில்லை என்று ஆறுதலளித்து

நான் சமாதானம் ஆனபிறகு - என் முன்னே 

சிரித்துக்கொண்டே ஒடுபவளைத்

துரத்தினேன் பிடிப்படவில்லை...



ரோஜாச் செடி

தன் சிறு ஆயுதத்தால் 

தன்னவளைத் தன்னிடமிருந்து 

பறித்துச்  சென்றவனைப் 

பழிதீர்த்துக் கொண்டது.



சிலையின் சன்மானம் 

பல மணி நேரம் 

நின்றதின் பலன்

நித்தம் வாடும்

மலர் மாலை தான். 



                                                                            -ஐஸ்வர்யா ரவீந்திரன்


     


Comments

Popular posts from this blog

LET'S GET A RIDE

                                                                                                                                                                                                                                           - AISHWARYA RAVINDRAN  

தேவதைகள் - ஃப்ரம் ஸ்ரீரங்கம்

முன்னுரை:                    தலைப்பைப் பார்த்தவுடன்   ஒருவேளை   இது   ஆன்மீக ரீதியான புத்தகமாக இருக்குமோ என்று தோன்றியது. ஏனென்றால் ஸ்ரீரங்கம் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு பிரசித்த பெற்ற ஆன்மீகத் தளம். அதுமட்டுமின்றி இதே எழுத்தாளரான சுஜாதா அவர்கள் ஏற்கனவே ஆன்மீக புத்தகங்கள் மற்றும் புதினங்கள் எழுதியுள்ளார். ஆதலால் கூட எனக்கு அப்படித் தோன்றியிருக்கலாம். இப்புத்தகத்தில் உலாவி வரும்   ஸ்ரீரங்கத்து   தேவதைகள் , ஆசிரியரின் கல்லூரி நாட்களில் அவருடன் பயணித்தவர் ஆவர். ஒரு சாதாரண மனிதனை எப்பொழுது தேவதை என்று குறிப்பிடலாம் என்ற கேள்விக்குத் தக்க பதிலை இந்த புத்தகம் அளிக்கின்றது.       நன்றி மறப்பது நன்றன்று:                   பாப்ஜி - நான் படித்த முதல் கதை. இதில் பூவராகவன் என்ற கதாபாத்திரம் பாப்ஜி என்று அழைக்கப்படுகிறார். இவர் ஆசிரியரின் கல்லூரி நண்பரும் கூட. கல்லூரியில் படிக்கும்போது ஒரு சில குழப்பங்களால் தவறான அபிப...

மனதின் சுவடுகள் - 2

 கவிதை - 1  வந்தாரை விழுங்கி  பசியாற்றிக்கொண்டேன்  வாயிற்கதவாய்...  கவிதை - 2 வழித்துணையாக வந்தவளை  வாசலிலே உதறிவிட்டேன்  வருத்தத்தில் காலணி கவிதை - 3 விரல்களின் வேகத்தால்  எழுந்தது இனிய இசை கணினியின் 'கீபோர்ட்டில்' கவிதை - 4 யாருக்கும் வளைந்து கொடுக்காமலே உயர்ந்தவன் நான் என்றது கம்பீரமான சுவர் கவிதை - 5 துளியும் கசியாத இருளில் கண்ணீருடன் மெழுகுவர்த்தி  கவிதை - 6 உனது மூட நம்பிக்கையினால் உயிர் பிரிந்தேன்  எலுமிச்சையாய்     - ஐஸ்வர்யா ரவீந்திரன்